திருப்பூர், பிப். 18- திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வரும் பிப்.21 (வெள்ளி) மாவட்ட ஆட்சியரின் தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதேபோல், திருப்பூர் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் பிப்ரவரி 20ஆம் தேதி (வியாழன்) காலை 11 மணி யளவில் திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும், இதில் திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் மற்றும் ஊத்துக்குளி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கலாம் என்று ஆட்சி யரக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.