tamilnadu

ரூ.17. 45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி,அக்.15- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், புத னன்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம்  1224 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்சிஎச்பிடி ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ.4,700 முதல் ரூ.5,310 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும் ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு  ரூ.17 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். இந்த ஏலத்தில் ஆத்தூர், மேட்டூர், கோபி, நம்பியூர், மலையப்பாளையம், சத்திய மங்கலம், கொள்ளேகால், அந்தியூர், அத்தாணி, அவி நாசி,  புளியம்பட்டி, குன்னத் தூர் ஆகிய பகுதிகளிலி ருந்து 202 பருத்தி விவசாயிக ளும், கோவை, ஈரோடு பகுதி யிலிருந்து  29 பருத்தி வியா பாரிகளும் பங்கேற்றனர்.