tamilnadu

img

கொரோனா: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களை தொடர்ந்து இயக்க தொழில் அமைப்புகள் முடிவு

திருப்பூர், மார்ச் 19- கொரோனா வைரஸ் தாக்கு தல் சூழலில் திருப்பூர் பின்ன லாடை தொழில் நிறுவனங்களை பாதுகாப்புடன் தொடர்ந்து இயக் குவதென அனைத்து தொழில் அமைப்புகள் முடிவு செய்துள் ளன. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற அனைத்து தொழில் அமைப்புகளின் கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங் கம், சைமா, டீமா, நிட்மா உள்ளிட்ட தொழில் அமைப்புகள் பங்கேற் றன. இக்கூட்டத்தில் கொரானா வைரஸ் திருப்பூரில் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நிறுவனங்களிலும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுத்து, பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பிடித்து தொடர்ந்து வேலை செய்வது. மத்திய, மாநில அரசாங்கத்திடம் வங்கி கடன்‌ மற்றும் வட்டி, இ.எஸ்.ஐ, பி.எப், ஜி.எஸ்.டி மற் றும் டி.டி.எஸ் ஆகியவற்றை கட்டு வதற்கு உண்டான கால அவகாசம் கோருவது. தொடர்ந்து தொழில் நடத்துவதற்காக புதிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்று கோருவது என்றும் தீர்மானிக்கப் பட்டது. மேலும், புதிதாக வேலைக்கு வரும் தொழிலாளர்களை உடல் பரிசோதனை செய்து வேலை யில் சேர்க்குமாறு அறிவுறுத்தப் பட்டது. அனைத்து தொழில் நிறுவனங் களும் உடனடியாக பாதுகாப்பு அம்சங்களை சீரிய முறையில் அமல்படுத்துவது என்றும் தீர் மானிக்கப்பட்டது.இவ்வாறு அனைத்து பின்னலாடை தொழில் அமைப்புகள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தெரிவித் துள்ளனர்.

;