tamilnadu

img

பந்தல் மணவறை அமைப்பாளர் சங்கம் துவக்கம்

உடுமலை, அக். 17- தமிழகம் முழுவதும் உள்ள பந்தல், மணவறை டெக்கரேஷன், ஒலி-ஒளி அமைப்பாளர்கள், பாத் திர வாடகைக்கடை உரிமையாளர்கள் அனைவரும் இணைந்த சங்கமான தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் தொடக்கவிழா உடுமலைப்பேட்டை தேஜஸ் மஹாலில் புதனன்று நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து  உடுமலைப்பேட்டை தாலுகா கிளை துவக்க விழா மாநில, மாவட்ட நிர்வாகிகள்  முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் உடுமலைப்பேட்டை கிளை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது.