tamilnadu

img

வாரச்சந்தையில் குடிமைப்பொருள் வட்டாட்சியர் ஆய்வு

திருப்பூர், ஜன. 5- திருப்பூர் அருகே அதிக விலைக்கு வெங்காயம் விற்பதாக எழந்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் வாரச்சந் தையில் குடிமைப்பொருள் வட்டாட் சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாடு முழுவதும் வெங்காய விளைச் சல் குறைந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக வெங்காய தட்டுப்பாடு கடுமையாக நிலவி வந் தது. இதன் காரணமாக வரலாறு காணாத அளவிற்கு வெங்காய விலை  உயர்ந்தது. இதனால்  பொதுமக்கள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையைப் போக்க  வெளிநாடு களில் இருந்து வெங்காயம் இறக் குமதி செய்யப்பட்டது. தற்போது வெங் காய விலை ஓரளவுக்கு கட்டுப்பாட் டுக்குள் வரத் தொடங்கி உள்ளது.  இதனைத்தொடர்ந்து வெங்கா யத்தை அதிக அளவில் பதுக்கி வைக் கக்கூடாது, அதிக விலைக்கு விற்கக் கூடாது என  அரசு எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் அனுப் பர்பாளையம் வாரச் சந்தையில் வெங் காயம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இத னையடுத்து திருப்பூர் வடக்கு குடி மைப்பொருள் வட்டாட்சியர் தமிழ் செல்வன் தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தையில் திடீர் ஆய்வில் ஈடு பட்டனர்.  இந்த ஆய்வின்போது, பல கடைக ளில் வெங்காய விலை குறித்தும், வெங் காய இருப்பு குறித்தும் விசாரணை  நடத்தினார்கள். அப்போது பெரிய வெங்காயத்தின் விலை 1 கிலோ ரூ.90, 80,70 என்றும், சின்ன வெங்காயம்  ரூ.140, 130, 120 என ஒவ்வொரு கடை யிலும் ஒவ்வொரு விலையை விற்ப னையாளர்கள் கூறினர். இதனால்  அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பொது மக்களை பாதிக்கும் வகையில் வெங்கா யத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், சில்லறை  விற்பனையாளர்கள் 2 டன் அளவும், மொத்த விற்பனையாளர்கள் 10 டன் அளவு மட்டுமே வெங்காயத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றனர். மேலும் அதிக அளவில் வெங் காயத்தை பதுக்கி வைக்கக்கூடாது என்றும் விற்பனையாளர்களை அதி காரிகள் எச்சரித்தனர்.

;