tamilnadu

img

அடிப்படை வசதிகள் கேட்டு இறைச்சிக் கடை உரிமையாளர்கள் மனு

அவிநாசி, பிப். 29- கருவலூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இறைச்சிக் கடை உரிமையாளர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தனர்.  அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சி யில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச் சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக் கடைகள் முறையாக செயல்பட கட்டிடம் கட்டித்தர வேண்டும். தண்ணீர், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வா கத்திடம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தனர். இதனால் இரண்டு ஆண்டுகளாக இறைச்சிக் கடை கள் ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட் டது. இருப்பினும் தற்போது வரை புதிய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்ப டுத்தி தரப்படவில்லை. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் மீண்டும் இறைச்சிக் கடை ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்துள் ளது. இதையடுத்து இறைச்சிக் கடை உரிமை யாளர்கள் அடிப்படை வசதிகள் செய்து  கொடுக்க வேண்டும் என்றும், அதன் பிறகு ஏலம் நடத்த வேண்டும் என கோரி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.மாரிமுத்துவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  இதன்பின் இதுகுறித்து இறைச்சிக் கடை உரிமையா ளர் கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏலம் விடும் போது சராசரியாக மீன் கடை, கோழி கடைகள் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை ஏலம் போகின்றது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளான  கட்டிடம், தண்ணீர், மின்சார இணைப்பு எதுவும் செய்து கொடுக்காமல் ஏலம் நடத்த ஏற்பாடு செய்தள்ளனர். இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். நீதிமன்ற வழி காட்டுதலின்படி அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பிறகே, இறைச்சி கடை ஏலம் விட வேண்டும் என்று உத்தரவு வழங் கியுள்ளது. இந்நிலையில், தற்போது புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஊராட்சி  மன்றத் தலைவர், இறைச்சிக்கடை ஏலம் எடுக்காமல் நடத்தி வந்துள்ளார். இவர் தற் போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா கவும் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல் படுகிறார் என்று தெரிவித்தார்.  இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், ஏலம் நடத்தப்படும் என்றும், மனு குறித்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் கலந்துகொண்டு முடிவை தெரிவிப்பதாக கூறினார்.