tamilnadu

நெல்லை தொகுதியில் 24 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

திருநெல்வேலி, மே 24-நெல்லை நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 24  பேர்  டெபாசிட்டை இழந்தனர்.நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வியாழனன்று வெளியானது. இதில் மத்தியில் மறுபடியும் பாஜக ஆட்சியை பிடித்தது. தமிழகத்தில் திமுக 38 இடங்களை பிடித்தது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 6 இல் ஒரு பங்கு வாக்குகளையோ அல்லது வெற்றி வேட்பாளர் பெற்ற வாக்குகளில் மூன்றில்ஒரு பங்கு வாக்குகளையோ பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் வேட்புமனு தாக்கலின்போது கட்டிய வைப்புத்தொகை திரும்ப வழங்கப்படும். அதன்படி, நெல்லை நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களில் திமுக,அதிமுக, தவிர அமமுக ,நாம் தமிழர் ,மக்கள் நீதி மய்யம்  ,நாம் இந்தியர் கட்சி, ஜம்மு-காஷ்மீர் நேஷனல் பேந்தர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.நெல்லை  நாடாளுமன்ற தொகுதியில் நோட்டா 10,958 வாக்குகளுடன் 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்ற நிலையில், அதிமுக,அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றின் வேட்பாளர்கள் முறையே 2 முதல் 5-ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர். 26 பேர் போட்டியிட்ட இத்தொகுதியில் 21 வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது நோட்டா.  நோட்டாவுக்கு ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 1900 வாக்குகள்,  நெல்லையில்  2,408வாக்குகள், அம்பாசமுத்திரத்தில் 1948 வாக்குகள், பாளையங்கோட்டையில் 1848 வாக்குகள், நான்குனேரியில் 1449 வாக்குகள், ராதாபுரத்தில் 1302 வாக்குகள், தபால் வாக்குகளில் 103 வாக்குகள் என மொத்தம் 10,958 வாக்குகள் கிடைத்துள்ளன.