tamilnadu

img

குற்றாலம் மலைப் பகுதிகளில் தொடர் மழை 3வது நாளாக அனைத்து அருவிகளிலும் வெள்ளம்

திருநெல்வேலி, ஆக.6- குற்றாலம் மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் குற் றாலத்தில் 3வது நாளாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலா பய ணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங் கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடித்துக் கொண்டிருக்கும் மேலும் குற்றாலத் தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். குற்றாலத்தில் சீசன் காலங்களில் ஏற்படும் இந்த இதமான சூழ்நிலை யை அனுபவிக்கவும் அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ வும் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழு வதும் உள்ள சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல் ஜூன் மாதத்தில் சீசன் துவங்கியது.

அனைத்து அருவிகளி லும் தண்ணீர் விழத் தொடங்கியது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக குற்றாலம் மலைப் பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் பலத்த சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அனை த்து அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் விழுந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் பொதுமக்களும் அருவியில் குளிப்ப தற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத னால் பொதுமக்களும் சுற்றுலாப் பய ணிகளும் இந்த ஆண்டு சீசனை அனுப விக்க முடியாமல் குற்றாலம் அருவி களில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

;