tamilnadu

img

மணிமுத்தாறு அணையில் சுற்றுலா படகு சவாரி தொடக்கம்

திருநெல்வேலி, ஜன.2- மணிமுத்தாறு அணையில் வனத் துறை சார்பில், சுற்றுலாப் படகு சவாரி புத்தாண்டு முதல் தொடங்கியது. அம்பாசமுத்திரம் வனச் சரகம் சார்பில் மணிமுத்தாறு அணைப் பகுதி யில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஓய் வுப் பூங்கா, அணையில் படகு சவாரி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டு வந்தது. இதற்காக வனத் துறை சார்பில் ரூ. 80 லட்சம் மதிப்பில் சூரிய மின்சக்தியில் இயங்கும் படகு வாங் கப்பட்டது.இந்நிலையில், படகின் சோதனை ஓட்டம் அம்பாசமுத்திரம் புலி கள் காப்பக துணை இயக்குநா் ஓம் காரம் கொம்மு உத்தரவின் பேரில் புதன்கிழமை (ஜன. 1) நடைபெற் றது சோதனை ஓட்டம் வெற்றியடைந் ததை யடுத்து சுற்றுலாப் பயணிகளுக் கான சேவை புதன்கிழமையே தொடங்கியது. அருவிக்கு சுற்றுலா வந்திருந்தோர், குழந்தைகள், குடும்பத்தினருடன் சவாரி செய்து மகிழ்ந்தனர். படகு சவாரிக்கு கட்ட ணமாக பெரியவர்களுக்கு ரூ. 110-ம், 12 வயது வரையிலானோருக்கு ரூ.55-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை படகு இயக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

;