தஞ்சாவூர், நவ.28- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில், அறந்தாங்கி செல்லும் சாலை யில் வெங்கடேஸ்வரா கல்லூரி அருகில் பழைய பேராவூரணி சாலைப் பள்ளம் குளம் கடந்த 10 வருடத்திற்கு மேலாக தூர் வாரப்படாமல் முட்புதர், நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் மண்டி குளம் தூர்ந்து இருந்தது. இப்பகுதிக்கு பல வருடங்களாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத் திற்கு போதிய நீர் கிடைக்கவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு போனது. 7 வருடமாக மழையும் குறைந்து விட்டதால், விவசா யிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வந்தனர். இந்த வருடம் மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. தற்போது பருவ மழை பெய்து வருவதால் இதனை பயன்படுத்தி நீர் நிலைகளை தூர்வார முடிவு செய்தனர். பழைய பேராவூரணி கிராம இளைஞர்கள் சொந்த முயற்சி யில் தற்போது ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலைப் பள்ளம் குளம் தூர்வா ரப்பட்டது. தற்போது தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. பல வரு டங்களுக்கு பிறகு குளம் தூர்வாரப் பட்டதால் கிராம மக்கள் இளைஞர்க ளை பாராட்டினர்.