அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை
கரூர், நவ.10- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கரூர் வட்டார மூன்றாவது மாநாடு வட்டார தலை வர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை சிஐடியு சங்க கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் துவக்கி வைத்து பேசினார். சிஐடியு சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் எம்.பாக்கியம் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.மகாவிஷ்ணன், அங்கன்வாடி ஊழி யர் சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் ரத்னமாலா ஆகி யோர் பேசினர். மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு ரூபாய் 1500 மற்றும் ரூ. 750 உடனடியாக நிலுவைத் தொகை யுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினக்கூலி அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, நவ.10- திருச்சி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்டங்களில் உள்ள நுண் உர செயலாக்க மைய வாகனங்களில் குப்பை களை சேகரம் செய்யவும் மற்றும் துப்புரவுப் பணிக்கும் தற்பொழுது மாநகராட்சியால் வழங்கப்பட்டு வரும் தினக்கூலி அடிப்படையில் பணி புரிய விருப்பமுள்ள தகுதி யான நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தாங்கள் குடி யிருக்கும் பகுதிக்கான கோட்ட உதவி ஆணையரிடம் வெள்ளைத் தாளில் உரிய விவரங்களுடன் விண்ணப்பம் செய்ய மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
லேப் டெக்னிசியன் காலிப் பணியிடம்
திருச்சிராப்பள்ளி, நவ.10- மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப் பட்ட 1432 லேப் டெக்னிசியன் கிரேடு 3 பணிக் காலியிடங்க ளுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள் அடங்கிய பட்டியல் தயா ரிக்கப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு எச்எஸ்சி கல்வித் தகுதியுடன் ஓராண்டு சான்றிதழ் மெடிக்கல் லேப் டெக்னாலஜி கோர்ஸ் கல்வித் தகுதியினை மருத்துவத் துறையினரால் அங்கீக ரிக்கப்பட்ட அரசு நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். மேற்கண்ட பணிக் காலியிடத்திற்கு வயது வரம்பு 1.7.2019 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்பட்ட வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. பகிரங்க போட்டியாளருக்கு உச்ச வயது வரம்பு 30 ஆகும். மேற்காணும் கல்வித் தகுதி உள்ள திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் மட்டும் நவ.11-ல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, வட்டாட்சியர் (மேற்கு) அலு வலகத்திற்கு பின்புறம் திருச்சி என்ற முகவரியில் நேரில் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் வருகை புரியு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
மரக்கன்றுகள் நடும் விழா
தஞ்சாவூர், நவ.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில், மன்னர் ராஜராஜ சோழனின் 1034 ஆவது சதய விழாவை யொட்டி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 25 ஆயிரம் மரக்கன்று கள் நடும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா கடந்த புதன்கிழமை அன்று வீரியங்கோட்டை பள்ளி அருகில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, கோகனட் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் எம்.நீலகண்டன் தலைமை வகித்தார். தேசிய விருது பெற்ற இயற்கை ஆர்வலர் நெடுவாசல் பசுமை ஏ.இராமநாதன், சேது பாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோ.செல்வம், வி.பால சுப்பிரமணியன், பொறியாளர் கே.இளங்கோ முன்னிலை வகித்தனர். செயலாளர் வி.ஜெய்சங்கர் வரவேற்றார். மன்னார்குடி நகராட்சி மருத்துவ அலுவலர் ஆர்.சந்திரசேகர் முதல் மரக்கன்றினை நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிறை வாக பொருளாளர் எஸ்.மைதீன் பிச்சை நன்றி கூறினார். ஏற்பாடு களை நிர்வாக அலுவலர் ஜெ.பிரேம்குமார் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். சுமார் 25 ஆயிரம் மரக்கன்று நடப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஆய்வு
தஞ்சாவூர், நவ.10- தஞ்சை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து அரசு முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு செய்தார். தஞ்சை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள், சீர்மிகு நகரம் திட்டப் பணிகள் குறித்து காதி மற்றும் கைத்தறி கைவினை பொருட்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்திற்கு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநகராட்சி சார்பில் நடை பெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பு.ஜானகி ரவீந்திரன் விளக்கிக் கூறினார். முடிவுறாத பணிகளை விரைவில் முடிக்குமாறு அரசு முதன்மை செயலாளர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பணியா ளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத் துறையின் அரசு கூடுதல் செயலாளர் என்.ரவிச்சந்திரன், பிரிவு அலுவலர் ஆர்.கார்க்குவேல் ராஜா, மாந கராட்சி செயற்பொறியாளர்கள் டி.இராஜ குமாரன், தயாநிதி, உதவி செயற்பொறியா ளர் ராஜசேகரன், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் கலந்து கொண்டனர். பின்னர் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநக ராட்சி அலுவலகத்தை அரசு முதன்மை செய லாளர் பார்வையிட்டார்.
ரத்ததான முகாம்
தஞ்சாவூர், நவ.10- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு மருந்து விற் பனை பிரதிநிதிகள் சங்க பட்டுக்கோட்டை கிளை சார்பில் சனிக்கிழமை அன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மோரீஸ் அண்ணா துரை தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை டாக்டர் நியூட்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிர்வாகிகள் காமராஜ், குலோத்துங்கன், ஒருங்கி ணைப்பாளர்கள் சுரேஷ், ஜெயசீலன் மற்றும் மருந்து விற்பனை பிரதி நிதிகள், ரத்த வங்கி அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளி மேற்கூரை விழுந்து ஒன்றாம் வகுப்பு மாணவி படுகாயம்
தஞ்சாவூர், நவ.10- தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை உடைந்து விழுந்து ஒன்றாம் வகுப்பு மாணவி காய மடைந்தார். பேராவூரணி அருகிலுள்ள முடச்சிக்காட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் சுமார் 132 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சனிக்கிழமை காலை 9.15 மணியளவில் பள்ளி துவங்குவதற்கு முன் கடந்த 2005 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் வராண்டாவில் மாணவ, மாணவிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டிடத்தின் மேற்பகுதி உடைந்து விழுந்தது. இதில் முடச்சிக்காடு தனசேகரன் மகள் நீவிஸ்ரீ தலை யில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக் காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இந்த பள்ளி வளாகத்தில் 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அங் கன்வாடி கட்டிடம் உள்பட ஆபத்தான நிலையில் மூன்று பள்ளி கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் மூடிக் கிடக்கிறது. இக்கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும்படி ஆசிரி யர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதி காரிகள் கண்டுகொள்ளவில்லை. மாணவ, மாணவிகள் பெரிய விபத்தில் சிக்கி அசம்பாவிதம் ஏற்படும் முன் பயனற்ற கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாண வர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.