ஜன.8-ல் திட்டமிட்டபடி போராட்டம் தொழிற்சங்கங்கள் முடிவு
திருவாரூர் டிச.13- வரும் ஜனவரி 8 ஆம் தேதியன்று பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆலோசனைக்கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஃப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி ஏற்கனவே திட்டமிட்ட பிரச்சார இயக்கத்திற்கு பதிலாக வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மற்றும் வாயிற்கூட்டங்களை நடத்திடவும், ஜனவரி 8 ஆம் தேதியன்று திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக திட்டமிட்டபடி போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
தரங்கம்பாடி தெரசா கல்லூரி விழா
தரங்கம்பாடி, டிச.13- நாகை மாவட்டம், தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்து பிறப்பு விழா கல்லூரி முதல்வர் தம்பையா தலைமையில் நடைபெற்றது. பிரபுதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அருட்சகோதரி வின்சென்ட் அமலா முன்னிலை வகித்தார், பேராசிரியர் ஜவஹர் வரவேற்றார்.கல்லூரி செயலாளர் கருணா ஜோச பாத், அருட்தந்தை செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர். கிறிஸ்து பிறப்பை விளக்கும் விதமாக. சிறப்பு பாடல் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
பன்னாட்டு ஆங்கில கருத்தரங்கில் ஏவிசி கல்லூரி மாணவியின் ஆய்வுக் கட்டுரை தேர்வு
மயிலாடுதுறை, டிச.13- சிவகங்கையில் உள்ள தனியார் கல்லூரி யில் நடந்த பன்னாட்டு ஆங்கில கருத்த ரங்கில் கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 52க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்து 500 மாணவ- மாணவிகள்கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் ஏவிசி கல்லூரி ஆங்கிலத்துறை யை சேர்ந்த முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி அ.சத்தியவதி ஆங்கில மொழி கற்றலை மேம்படுத்துவதில் நவீன தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு மற்றும் பயன்கள் என்ற தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த 52 ஆய்வுக் கட்டு ரைகளை தேர்வு செய்து புத்தகமாக கருத்த ரங்கு ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் 45 கட்டுரைகள் பல்கலை., மற்றும் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரி யர்கள், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாண வர்களுடையவை 7 கட்டுரைகள் மாணவர்க ளுடையவை. அதில் மாணவி அ.சத்திய வதியின் ஆய்வுக்கட்டுரையும் உண்டு. மேலும் மாணவி சத்தியவதி இரண்டாவது முறையாக பன்னாட்டு ஆங்கில கருத்த ரங்கில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பன்னாட்டு ஆங்கில கருத்தரங்கில் சிறந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த மாணவி யை கல்லூரியின் தலைவர் என்.விஜய ரெங்கன், செயலர் கி.கார்த்திகேயன், பொரு ளாளர் என்.ஞானசுந்தர், கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், முதல்வர் இரா.நாகராஜன், பேராசிரியர்கள், பணி யாளர்கள் மற்றும் சக மாணவ- மாணவி கள், பெற்றோர் பாராட்டினர்.