பெரம்பலூர், மே 18-தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைசாலைப் பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் சனியன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜா, ராமநாயகம், மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் மகேந்திரன், மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். மாநில தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.கூட்டத்தில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்டவைகோரியும், சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றி அரசாணை வழங்கும் வரை வரும் 28-ம் தேதி முதல் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் ரஜினி வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் முத்து நன்றி கூறினார்.