தூத்துக்குடி, ஜூன் 18- தூத்துக்குடியில் பதிவு செய்யாத விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதி அளித்ததைக் கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாயன்று 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் 245 விசைப்படகுகள் உள்ளன. இவற்றில் பாதி அளவு படகுகளே மீன்வளத்துறை மூலம் பதிவு செய்யப்பட் டுள்ளன. இதில் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத சில விசைப்படகுகளும் மீன் பிடித்து வருவதாக நாட்டுப் படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிவு செய்யப் படாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் திங்களன்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தொடரும் என தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு, பைபர் மற்றும் கட்டுமர மீனவ நலச்சங்கத்தினர் தெரி வித்தனர்.