tamilnadu

img

கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரம்பலூர், ஜூலை 27- தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் குலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார், பெரம்பலூரில் செய்தியாளர்களி டம் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை குறித்து விவாதித்தோம்.  புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வரவேற்கத்தகுந்தது. அதில் பல்வேறு மாற்றங் களை செய்து அனைத்து மாணவர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் புதிய கல்விக் கொள்கை அமைய வேண்டும். மும்மொழி கல்வித் திட்டத்தை வரவேற்கி றோம்.

தமிழ், ஆங்கிலம் அல்லாத பிற மொழி கற்பதை உறுதி செய்ய வேண்டும்.  தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் மும்மொழி திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளாக செயல் படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்தவேண்டும். நர்சரி பிரைமரி பள்ளி களை நடுநிலை பள்ளியாகவும், மெட்ரிகுலே ஷன் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த வேண்டும். பழைய பள்ளி கட்டி டங்களுக்கு னவஉp சிஎம்டிஏ எல்பிஏ அனு மதி பெற வேண்டும் என்ற அரசின் ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விதிவிலக்கு வழங்கியதை ஏற்று அரசாணை வெளியிட வேண்டும்.  தமிழகத்தில் இயங்கும் தனியார் சுயநிதி பள்ளிகள் 20ஆயிரம் பள்ளிகளில் மாண வர்களின் பயன்பாட்டுக்காக 45 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இயங்குகின்றது, 1.50 லட்சம் ஆசி ரியர்கள் பணியாற்றுகிறார்கள். ஒருகோடியே 50 லட்சம் மாணவர்கள் பயில்கிறார்கள். அரசு பள்ளிகளை விட அதிகமாக மாணவர்கள் எண்ணிக்கை தனியார் பள்ளிகள் உயர்ந்தி ருக்கிறார்கள். தனியார் பள்ளிகளை வளர்ச்சி யின் மூலம் தமிழக அரசுக்கு மத்திய அரசுக்கு மாபெரும் மனச்சுமை பணிச்சுமை குறை கிறது. நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ண யிக்க வேண்டும்.

 அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம் மூலம் தமிழகத்தில் 4.50 லட்சம் பேருக்கு இலவச கல்வியை தனியார் பள்ளி கள் வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு 1.75 லட்சம் பேர் தனியார் பள்ளியில் சேர்ந்தி ருக்கிறார்கள். சென்ற ஆண்டு கல்வி கட்ட ணத்தை வழங்க வேண்டும். புதிய பாடத் திட்டம் கொண்டுவந்ததை வரவேற்கிறோம். புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சியை ஆசி ரியர்களுக்கு வழங்க வேண்டும். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஜிபி ஆர்எஸ் பொருத்த வேண்டும் என்கிற தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். தமிழகத்தில் அங்கீ காரமின்றி செயல்படும் பள்ளிகளுக்கு உடனடி அங்கீகாரம் வழங்க வேண்டும். இனிமேல் தமி ழகத்தில் எந்த ஒரு புதிய பள்ளிக்கும் புதிதாக அங்கீகாரம் வழங்கக் கூடாது. கூடுதல் கல்வி கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகளை கண் காணித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

;