tamilnadu

img

இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க கோரிக்கை

கும்பகோணம் ஜூன் 8- இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜி.எஸ்டி வரி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு இயக்கம் கும்பகோணம் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ.இராமலிங்கத்தின் இல்லத்திற்குச் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தும், கும்பகோணம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் கோட்டச் சங்க பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன், சேகர் எல்ஐசி கிளை-1 பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன்,  வீரபாண்டியன் கிளை-2 சுரேஷ், வரதராஜன் உள்ளிட்ட சங்கப் பொறுப்பாளர்கள் இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை  நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக வலியுறுத்தி மனு அளித்தனர்.  அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கோரிக்கைகளை உரிய இடத்தில் வலியுறுத்துவதாக உறுதியளித்தார்.