திருச்சிராப்பள்ளி, நவ.15- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வையம்பட்டி ஒன்றிய சங்க பேரவை கூட்டம் வியாழனன்று வையம்பட்டி கருங் குளத்தில் எம்.ராஜ் தலைமையில் நடைபெற்றது. பேரவையை விதொச மாவட்ட துணை செயலாளர் எம்.கண்ணண் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் அ.பழநிசாமி, சிபிஎம் ஒன்றிய செயலா ளர் பி.வெள்ளைசாமி, தவிச ஒன்றிய செயலாளர் என்.வெள்ளைச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் பி.முனியப்பன் ஆகியோர் பேசினர். பி. கண்ணண் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில், வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி யில் 100 நாள் வேலை திட்டத்தை உடனே துவங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள சட்டக்கூலி ரூ.229 வழங்க வேண்டும். வாரவாரம் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.