பொன்னமராவதி, ஆக.23- புதுக்கோட்டை பொன்னமராவதியில் சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு முகாம் காவல் துறை சார்பில் நடைபெற்றது. காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் தலைமையில் நடந்த விழிப்புணர்வு பயணிகள் ஆட்டோ, லோடு ஆட்டோ, மினி லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் போக்குவரத்துக்கு இடையூறாக அண்ணா சாலை, சந்தை வீதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் விடுத்தனர். பின்னர் அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன், மாயழகு, தலைமை காவலர் பெருமாள், போக்குவரத்து உதவி ஆய்வாளர் பொண்ணு வேல், சிறப்பு உதவி ஆய்வாளர் அழகப்பன், திருமயம் ஆய்வாளர் மனோகரன், உதவி ஆய்வாளர் மாரிமுத்து, நமணசமுத்திரம் உதவி ஆய்வாளர் அன்பழகன், அரிமளம் உதவி ஆய்வாளர் மேகநாதன், கே.புதுப்பட்டி உதவி ஆய்வாளர் ஆனந்த், பனையப்பட்டி உதவி ஆய்வாளர் ரெக்ஸ் ஸ்டாலின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.