tamilnadu

img

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை குறைத்திடுக! இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே! வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 5- பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப் படுத்த வேண்டும்; தனியார் வங்கி களிடம் வாங்கிய நுண்கடனைக் கொ ரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை  வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்; இலவச மின்சாரத்தை ரத்து செய்தி டக் கூடாது; அனைத்துத் தொழிலாளர்க ளுக்கும் ரூ.7500 மற்றும் 6 மாதத்தி ற்கான உணவுப் பொருள்களை வழ ங்க வேண்டும்; 100 நாள் வேலைத் திட்ட த்தை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
வாலிபர் சங்க காட்டூர் பகுதிக்குழு சார்பில் திருவெறும்பூர் காந்திநகர் மாரி யம்மன் கோவில் அருகே மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின்  தலைமை வகித்தார். திருப்பரா ய்த்துறை மின்வாரிய அலுவலகம் முன்பு  வாலிபர் சங்க அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் அஜித்குமார் தலைமை வகி த்தார். லால்குடி ரவுண்டானா அருகில் சிபிஎம் லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நாகப்பட்டினம்
நாகை ஒன்றியம், அகரஒரத்தூரில் சங்க நாகை ஒன்றியத் தலைவர் பி.எம். நன்மாறன் தலைமை வகித்தார். ஒன்றி யச் செயலாளர் ஏ.வடிவேல் விளக்கவு ரையாற்றினார். சிக்கல் கடைத்தெரு வில் நாகை ஒன்றியப் பொருளாளர் ஜி. சிந்தன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவக்கு மார் சிறப்புரையாற்றினார்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைபூண்டி ஒன்றிய குழு -  நகர குழுவின் சார்பில் ஒன்றியச் செயலா ளர் ஏ.கே.வேலவன், நகரச் செயலாளர்  வழக்கறிஞர் சி.சிவசாகர் தலைமை வகி த்தனர். இதில் மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே வாலிபர் சங்க ஒன்றியத் தலை வர் பி.குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் கே.பகத்சிங் கண்டன உரை யாற்றினார். வலங்கைமான் ஒன்றியம்  ஆலங்குடி கடைவீதியில் வாலிபர் சங்க  ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயராஜ் தலைமையில் இருசக்கர வாகன த்திற்கு இறுதி அஞ்சலி நடத்தும் நூதன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பி.விஜய் கண்டன உரையாற்றினார். நீடாமங்கலம் ஒன்றி யம் ஒளிமதியில் கிளைத் தலைவர் மகா தேவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு கண்டன உரையாற்றினார்.