tamilnadu

img

தனியார் பள்ளிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஜன.14- தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க நிர் வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பட்டுக்கோட்டை லிட்டில் போர்டு மெட்ரிக் பள்ளியில் திங்கட்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு, சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத்தலைவர் மைவண்ணன் தலைமை வகித்தார். பேராவூரணி அகஸ்ட் சீயோன் பள்ளித் தாளாளர் தளபதி சிறப்புரையாற்றினார்.  ஆக்ஸ்போர்டு மெட்ரிக். பள்ளித் தாளாளர் என்.உதயகுமார் நன்றி கூறினார். 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வுகளை அந்தந்த பள்ளிக ளில் தேர்வு எழுத அனுமதி பெறுதல், 2018-19, 2019-20 ஆம் ஆண்டுக்கான ஆர்டிஇ கட்டணங்களை விரைவில் பள்ளிகளுக்கு வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;