tamilnadu

img

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்பு

நாமக்கல், ஜூன் 6- நாமக்கல்லில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவ டிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ், காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி சுகாதாரத்துறை அலு வலர்கள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.  பின்னர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வருவாய் துறையில் பணி புரிந்து பணியின்போது இறந்தவரின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணிக்கான பணி ஆணையினை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.338.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அலுவலக கட்டடம், விடுதி கட்டடங்கள், மருத்துவமனை கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கான கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஆர்.சாரதா, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள் மொழி, துணை இயக்குநர் (சுகாதாரம்) சோமசுந்தரம், இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் த.கா.சித்ரா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைதலைவர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.