tamilnadu

img

அறந்தாங்கி பள்ளி, கல்லூரியில் பொங்கல் விழா

அறந்தாங்கி, ஜன.14- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி கிளப், மகாராணி ரோட்டரி கிளப் மற்றும் செலக்சன் கல்வி நிறுவனங்கள் இணைந்து  கிராமிய விழிப்புணர்வு பேரணி மற்றும் சமத்துவ பொங்கல் விழா  நடைபெற்றது. பேரணியை ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் ஜமீர் பாஷா மற்றும் முதல் பெண்மணி டாக்டர் சகிலா ஜமீர் தொடங்கி வைத்தனர்.  பேரணியில் கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், பறை, போன்ற கலைகளுடன் செலக்சன் பள்ளி மாணவ, மாணவிகள் வேட்டி, சேலை அணிந்து வர சிறப்பாக நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கண்ணையன் முன்னிலை வகிக்க, பள்ளி முதல்வரும், அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவ ருமான க.சுரேஷ்குமார் வர வேற்றார். ரோட்டரி மாவட்ட செயலா ளர் திருநாவுக்கரசு, மண்டல ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த், துணை ஆளுநர் கராத்தே கண்ணையன், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர்கள், மகாராணி ரோட்டரி கிளப் தலைவர் மீனு கணேஷ் மற்றும் முன்னாள் தலை வர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி பேருந்து நிலையம் தொடங்கி செலக்சன் பள்ளி வரை நடைபெற்றது. பேரணியிலும், பொங்கல் விழாவிலும் பிரேசில் நாட்டை சேர்ந்த மரியானா கலந்து கொண்டார். பேரணி பள்ளியில் முடிவுற்று தொடர்ந்து பொங்கல் விழா, மாணவர்கள் கலை நிகழ்ச்சி, பானை உடைத்தல் போன்ற நிகழ்ச்சி களுடன் நடைபெற்றன. நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  அறந்தாங்கி அகரம் பகுதியில் இயங்கி வரும் கார்னிவல் ஸ்கில் டிரெய்னிங் இன்ஸ்ட்டியூட்டில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஆடிட்டர் தங்கதுரை தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ரெங்கசாமி, ஆசிரியைகள் எஸ்.வினோதினி, ஆர்.நிர்மலா மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலை மையில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. அழ.மீனாட்சிசுந்தரம், துணை முதல்வர் மரு.ராஜ்மோகன், மருத்து வர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;