தரங்கம்பாடி, ஜன.16- நாகை மாவட்டம், திருக்களாச்சேரி ஊராட்சி, ஆயப்பாடி கடைவீதியில் இஸ்லாமிய பெண்கள் முன்னின்று சாதி, மத பேதமின்றி சமத்துவ பொங்கல் விழாவை புதனன்று நடத்தி னர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அனைவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், வீர சாகச நிகழ்ச்சிகள், கிராமியப் பாடல்கள் என ஏராளமான கலைநிகழ்ச்சிகள் மக்களை வெகுவாய் கவர்ந்தன. ஊராட்சிமன்ற தலைவர் சம்சாத் ராபீக் தலைமையில் நடை பெற்ற விழாவில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன், மாவட்ட கவுன்சிலர் நர்கீஸ் பானு அப்துல் மாலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரிப் நிசா ரபீக், ஒன்றிய கவுன் சிலர் அனுசியா அறிவழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆயப்பாடி முஜிபுர்ரஹ்மான் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.