tamilnadu

img

திருச்சி தா.பேட்டை பகுதியில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.4-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் வியாழனன்று திருச்சி தா.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாப்பட்டி, பூலாஞ்சேரி,அஞ்சலம், நீலியாம்பட்டி, கோணப்பம் பட்டி, ஜடமங்கலம், வாளசிராமணி, ஆண்டிப்பட்டி, கலிங்கப்பட்டி, மலையப்பநகர், மகாதேவிபுதூர், லட்சுமாபுரம், ராசிபுரம், திருமுருகன் நகர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணி, முருகேசன், ஒன்றியச் செயலாளர் காமராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சேகர் உள்ளிட்ட கூட்டணிகட்சியினர் கலந்து கொண்டனர்.

;