politics

img

யாருக்கு வாக்களித்தோம்... உறுதி செய்ய முடியுமா?

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் ‘வாக்களித்தது யாருக்கு என்பதை அறிந்துகொள்ளும் வசதி’ (Voter Verifiable Paper Audit –TRAIL VVPAT)தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு செலுத்து பவர்கள் மட்டுமே பார்க்கமுடியக்கூடிய ஒரு நவீன தொழில்நுட்ப வசதி ஆகும் இது. இந்த வசதி இப்போதுதான் முதல்முறையாக பயன்படுத்தப்படுகிறது.இந்த அச்சுப்பொறி இயந்திரங்கள் பெங்களூரில் உள்ள பாரத் மின்னணுநிறுவனத்தால் (BEL) தயாரிக்கப் பட்டுள்ளவை ஆகும். இந்த அச்சுப்பொறி இயந்திரம் ஒவ்வொன்றும் 2000 தாள்கள் வரை அச்சிடக்கூடிய திறன் உள்ளது ஆகும். இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிற வாக்குச்சாவடிகளில் 2000க்கும் குறைவான வாக்காளர்களே இருப்பதால் இந்த இயந்திரம் திறம்பட செயல்படமுடியும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். வாக்கு பதிவு செய்யும் இயந்திரத்தின் பகுதியில் 

(voting compartment) வாக்குச்சீட்டு அலகோடு (ballet unit) சேர்ந்து இந்த வசதியை செயல்படுத்துகின்றது. இதற்காக ஒரு அச்சுப்பொறியும் (printer) சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. முன்காலங்களில் நாம் வாக்குச்சீட்டைப் போட்டு வாக்க ளிக்கும்போது, வாக்குச்சீட்டில் நமக்கு விருப்பமான சின்னத்தில் குறியை இட்டு நம் வாக்கை செலுத்தும் முறை நடைமுறையில் இருந்தது. வாக்கு அளிப்ப வருக்கு தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்களால் பார்த்து உறுதிப்படுத்தமுடியும். ஆனால், இப்போது ஓட்டு போட ஒரு இயந்திரம் வந்தபிறகு, இயந்திரத்தில் நாம் பதிவு செய்கிற வாக்குஎன்பது முற்றிலும் வேறுப்பட்ட முறையில் இருந்தது. வேட்பாளரின் சின்னத்திற்கும், பெயருக்கும் நேராக ஒரு சிவந்த விளக்கு எரிந்து அணைவதும், ஒரு பீப் சத்தம் கேட்பதும்தான் வாக்கை பதிவு செய்ததற்கான அடையாளமாக நாம் ஊகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் குறைபாட்டைப் போக்கு வதற்காக உச்சநீதிமன்றத்தின் அறிவுரை யின்படி இந்திய தேர்தல் ஆணையம் முதல்முறையாக இத்தகைய ஒரு மாற்றத்தை புதிதாக இயந்திரங்களில் ஏற்படுத்தி சில தொகுதிகளில் மட்டும் இதை அறிமுகப்படுத்தவும் செய்கிறது. எல்லா தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த வசதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளோ, இயந்திரங்களோ தேர்தல் கமிஷனின் கையில் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கை செலுத்துவதோடு, அதன் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள வாக்கு யாருக்கு செலுத்தினோம் என்பதை அறிவதற்கான(VVPAD)கருவியிலும், வாக்களித்த வேட்பாளருடைய பெயரும், சின்னமும், வரிசை எண்ணும் அடங்கிய சீட்டு (ளடiயீ) தென்படும். 7 விநாடிகள் நேரத்திற்கு வாக்காளருக்கு தான் வாக்களித்த இந்த சீட்டைப் பார்க்கமுடியும். 7 விநாடி களுக்குப் பிறகு, சீட்டு தானே மடங்கி கீழே இருக்கும் முத்திரையிடப்பட்ட பெட்டிக்குள் போய் விழுந்துவிடும். இந்த புதிய கருவி ஒரு சிறிய பெட்டியைப் போல உள்ளது. இதன் மூலம் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தான்வாக்கு அளித்திருக்கிறோமா என்பதையும், இது தொடர்பாக பல சந்தேகங்கள்எழுகின்ற வாக்காளர்களும் திருப்தியடை யும் வகையில் இந்த கருவி அமைக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


2020ம் ஆண்டு நடக்கும் எல்லா தேர்தல்களிலும் முழுமையாக இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்கிறார்கள். வி.வி. பேட் வசதியை முதல்முதலாக அறிமுகப்படுத்தும் தொகுதிகளில் மக்களிடையே இதைப் பற்றிய பொதுவான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடமாடும் வாக்குப் பதிவு வாகனங்கள் குறிப்பிட்ட அந்தத் தொகுதிகள் முழுதும் சுற்றி வந்துள்ளன. இந்த வாக்குப்பதிவு கருவிகள் அனைத்தும் 99.95 சதவீதம் தவறுகள்எதுவும் நிகழாதவண்ணம் நம்பகத்தன்மை யுடைய கருவிகள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.ஒருவேளை வாக்காளர் வாக்கு இயந்திரத்தில் தான் விரும்பிய வேட்பாளருக்கு, அதாவது தான் அழுத்திய பொத்தானுக்கு நேராக இருக்கும் வேட்பாளருக்கும், அவருடைய சின்னத் திற்கும் தான் அளித்த வாக்கு விழவில்லை என்று சந்தேகப்பட்டால், அவர் அதில் உறுதியாக இருந்தால்,உடனே அவர் வாக்குச்சாவடி அலுவலரிடம் இதுபற்றி புகார் தெரிவிக்கலாம். புகார்செய்வதில் நிபந்தனைகள் உண்டு. வாக்குச்சாவடி அலுவலர் அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளின் முன்னால் வாக்காளருக்கு மறுபடியும் ஒரு பரிசோதனை ரீதியிலான வாக்கைப்பதிவு (வநளவ எடிவiபே) செய்வதற்கு அனுமதிஅளிப்பார். வாக்காளர் அளித்த வாக்குதவறாக இல்லாமல் சரியாகத்தான் பதிவாகி யிருக்கிறது என்பது உறுதிசெய்யப்பட்டால், அந்த வாக்காளருக்கு 6 மாதங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும். இவை இரண்டில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டுமோ சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.சிதம்பரம் ரவிச்சந்திரன்