சின்னாளபட்டி, டிச. 14- கொடைரோட்டில் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டனர். திருச்சிராப்பள்ளி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராபதி. மருத்துவ உபகரணங்கள் வாங்கி விற்கும் முகவராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தி னருடன் நவம்பர் 11-ஆம் கொடைக்கானல் சென்றுள்ளனார். அங்கிருந்து வெள்ளியன்று கொடை ரோட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் அருகில் மதுரை- திண்டுக்கல் மார்க்கத்தில் திரு நெல்வேலியிலிருந்து-சென்னை சென்ற ரயிலில் வியாழனன்று இரவு நான்குபேர் அடிபட்டு கிடப்பதாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவர்கள் நான்கு பேர் உடலை மீட்டு திண்டுக் கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் ஆதார் அடை யாள அட்டையை வைத்து அவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டது.திருச்சிராப்பள்ளி உறையூர் உத்திராபதி, அவரது மனைவி சங்கீதா (43), மகள் அபிநயஸ்ரீ (15), மகன் ஆகாஷ் (13) என்பது தெரியவந்தது. ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் நான்கு பேர் அமர்ந்திருப்பதைப் பார்த்து தொடர்ந்து ஒலி எழுப்பிய தாகவும் அவர்கள் எழுந்திருக்காமல் அங்கேயே அமர்ந்திருந்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.