கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அலைக்கழிப்பு
கும்பகோணம், ஜூன் 27- கும்பகோணம் அரசு மருத் துவமனையில் நாள் ஒன் றுக்கு நூற்றுக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளி கள் பாபநாசம் திருப்பனந் தாள் திருவிடைமருதூர் உள் ளிட்ட தாலுகாக்களில் இருந்து பொதுமக்கள் அன்றாடம் சிகிச்சைக்காக வந்து போகி றார்கள். ஆனால் மருத்துவமனை யில் போதிய தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லாததாலும் மருத்துவர்கள் பற்றாக்குறை யினாலும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை உரிய காலத் தில் வழங்க முடியாமல், மிக வும் அவதிப்பட்டு உயிர் இழ ப்பை சந்திக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. இசிஜி எக்ஸ்-ரே மற்றும் ரத்தப் பரி சோதனை கூடத்தில் போதிய ஊழியர்கள் இல்லை. இது போன்ற காரணங்களால் நோயாளிகளுக்கு உரிய நேரத் தில் எந்த நேரமும் சிகிச்சை மற்றும் உரிய பரிசோதனை உடனுக்குடன் பெற முடிய வில்லை. இது சம்பந்தமாக சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன் கூறும்போது, அசாதாரண சூழ்நிலையை அதிகாரிகளிடம் தெரிவிப்ப தாகவும், உடன் நடவடிக்கை எடுக்காமல் இந்நிலை தொட ர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தடை
கும்பகோணம், ஜூன் 27- பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் கூறுகையில், தமிழக கனிம வளங்களைச் சூறையாடும் நோக்கத்தோடு நுழைய இருக்கும் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களை விரட்டியடிக்க வேண்டும். காவிரி கடைமடைப் பகுதி வாழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கத் தில் திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டிற்குத தமி ழக அரசு தடை விதித்திருக்கிறது. தூத்துக்குடியில் 14 பேர் சுட்டுக் கொல்லப் பட காரணமான வேதாந்தா நிறுவனத்திற்கு வழி விடுவது தான் அதிமுக அரசின் நோக் கம் என்றால் அதையும் கடுமையாக எதிர்க்க வும் கண்டிக்கவும் செய்கிறோம். ஏற்கனவே, தமிழகத்தின் கனிம வளங்களை ஒரு சல்லிக் காசு கூடப் பங்கீடு கொடுக்காமல் சூறை யாடிக் கொள்ளையடித்துச் செல்லும் பன் னாட்டுக் கூட்டு நிறுவனங்களை வெளி யேற்றிடும் கடமை கொண்ட தமிழக மக்க ளுக்கு ஆதரவாய் நிற்காமல் செயல்படு கிறது அதிமுக அரசு. மக்களின் துணையோடு, சட்டப்படி அர சின் தடையை உடைத்து, மாநாட்டைப் பெரி யாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தி டும். மக்கள் போராட்டங்கள் எல்லாம் நீதி மன்றம் சென்று அனுமதி பெற்று வருவது வருந்ததக்கது என்றார்.