tamilnadu

img

அரசு கேபிள் டிவி கட்டண உயர்வை  கண்டித்து நூதனப் போராட்டம் 

 திருச்சிராப்பள்ளி, அக்.14- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருந்ததாவது: திருச்சி மாவட்டம் முழு வதும் அரசு நிர்ணயித்த கேபிள் டிவி கட்டணத்தை எந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களும் கடைபிடிப்பதில்லை. அரசு நிர்ணயித்த ரூ 130 மற்றும் ஜிஎஸ்டியுடன் ரூ 154 (60 கட்டண சேனல்கள் உள்பட) ஆனால் ஒவ்வொரு வீடுகளிலும் ரூ 250 முதல் ரூ 300 வரை வசூலிக்கப்படு கிறது. இதில் தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்திருந்தார். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், பாரதி நகர் கிளை தலைவர் சோலைராஜன், கிளை நிர்வாகிகள் கண்ணா, அஜ்மல், வெங்கடேஷ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி செயலாளர் சிவக்குமார் ஆகி யோர் உடனிருந்தனர். முன்னதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அரசு கேபிள் டிவி கட்டண உயர்வை கண்டித்து டி.வி ரிமோட்டை மாலையாக அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக வந்தனர்.

;