திருச்சிராப்பள்ளி, ஆக.22- திருச்சியில் சாலைகளை விரைவாக சீரமைக்கக் கோரி கை, கால்களில் கட்டு போட்டும், நாய், மாடு, பன்றி படங்கள் வைத்து கோசம் எழுப்பியும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் திங்களன்று திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தோண்டப்பட்டுள்ள சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் இல்லாத மாநகர பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தெரு நாய்கள், மாடுகள், பன்றிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். காவிரி குடிநீரை தங்குதடையின்றி சுகா தாரமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சேது பதி, நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், ஷாஜ கான், சந்துரு, யுவராஜ், நிவேதா ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மேயரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.