பொன்னமராவதி, மே 21-புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்தில்வேளாண்மைத்துறை சார்பில் மானியத்தில் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் அமைத்து விவசாயிகள் பயன்பெறுவது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் சா.சிவராணி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:பிரதம மந்திரியின் நீர் பாசன திட்டத்தின் (ஞஆமுளுலு) கீழ் சிறு-குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்பாசன கருவிகள் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.பொன்னமராவதி வட்டாரத்தில் 2018-ம் ஆண்டு பெய்த மழைஅளவானது 644.15 மிமீ. இதனால் கண்மாய்கள் அனைத்தும் நீர்இன்றி காணப்படுகிறது. மேலும் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. குறைவாக இருக்கும்நீரை பயன்படுத்தி நீர் தேவை குறைவாக தேவைப்படும் பயிர்களான உளுந்து மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க தேவையானஆவணங்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல்,சிட்டா, அடங்கல், நில புல வரைபடம், சிறு-குறு விவசாயிக்கான சான்று, புகைப்படம், மண் மற்றும் நீர் பரிசோதனைஅட்டையுடன் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதிகபட்சமாக ஒரு விவசாயி 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைக்கலாம். இதர விவசாயிகளுக்கு சிறு-குறு விவசாயிசான்று தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.