தஞ்சாவூர், ஜூன் 17- தஞ்சாவூர் மாநகரில் செயல் படுத்த உள்ள ஸ்மார்ட் சிட்டி திட் டத்துக்காக கோட்டை அகழி சுவரில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் கீழஅலங்கம் மற்றும் கொடிமரத்து மூலை ஆகிய பகுதிகளில் சுமார் 500 வீடுகள் ஏற்கனவே இடித்து அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து வடக்கு அலங்கம், மேல அலங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் விரைவில் இடித்து அகற்றப்படுவதற்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. மேலும், காமராஜர் மார்க்கெட், கீழவாசல் சரபோஜி மார்க்கெட் ஆகியவை இடிக்கப் பட்டு அங்கு புதிதாக கடைகள் கட்டித் தரப்படவுள்ளன. இதனால் காமராஜ் மார்க்கெட்டில் ஏற்க னவே இரண்டு தலைமுறைகளாக வியாபாரம் செய்து வரும் வியாபாரி களுக்கு கடைகள் கிடைக்காது. ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அச்சம் வியாபாரிகள் மத்தி யில் நிலவுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக வீடுகளை இடித்து வாழ்வாதாரத்தை கெடுக்காமல் மாற்று வழியில் அகழி தூர்வாறு தல், நீர்நிலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் சட்டப் பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீல மேகம்(திமுக) தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத் தைகள், ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பிரதி நிதிகளும், கோட்டை சுவரில் வசிக் கும் பொதுமக்களும் என 500-க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று அதி காரிகளிடம், வீடுகளை இடிக்கக் கூடாது என மனுக்களை வழங்கி னர். தொடர்ந்து ஆட்சியர் அலு வலகத்துக்கு சென்று ஆட்சியரிடம் நேரில் மனுக்களை வழங்கினர். அதே போல் ஆட்சியர் அலுவல கத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் அமமுக வின் மாநில பொருளாளருமான எம். ரெங்கசாமி தலைமையில் அக்கட்சி யினர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோட்டை சுவர் வீடுகளை இடிக்கக் கூடாது என மனு வழங்கினர். மேலும், திடக்கழிவு மேலா ண்மை என்ற பெயரில் நகரில் 14 இடங்களில் ஏற்கனவே அமைக்கப் பட்டிருக்கும் பூங்காக்கள் மற்றும் பொது பயன்பாடுகளில் உள்ள இடங்களில், குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிட்டுள்ள தற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளதால், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.