tamilnadu

img

ஊராட்சி பணியாளர்களுக்கு பணிப் பதிவேடு கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், நவ.25- அனைத்து ஊராட்சி பணி யாளர்களுக்கும் பணி பதி வேட்டினை உடனடியாக துவங்கி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சிஐடியு தலைமை யிலான ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் கள் மற்றும் என்எம்ஆர் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திங்கட்கிழமையன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமை யேற்றார். மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. மாலதி, மாவட்டச் செயலா ளர் டி.முருகையன், துணைச் செயலாளர் எம்.கே.என்.அனிபா, சங்க மாவட்டச் செய லாளர் கே.முனியாண்டி உள் ளிட்டோர் உரையாற்றினர்.  மாநிலக் குழு உறுப்பி னர் டி.கலியமூர்த்தி, மாவட் டப் பொருளாளர் வி.பி.ஞான சேகரன், மாவட்ட நிர்வாகி கள் எஸ்.காமராஜ், கே.ஆறு முகம், எஸ்.தமிழ்ச்செல்வம் மற்றும் கிராம ஊராட்சி மேல்நிலைத்தொட்டி இயக்குநர்கள், துப்புரவுப் பணியாளர்கள், உள்ளாட்சி ஊழியர்கள் உட்பட ஐநூ றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சிராப்பள்ளி

திருச்சி மாவட்ட உள்ளா ட்சி துறை ஊழியர் சங்கத்தின் புறநகர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பழனி வேல் தலைமை வகித்தார். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவரா ஜன், உள்ளாட்சி துறை ஊழி யர் சங்க மாவட்டச் செயலா ளர் பன்னீர்செல்வம், சிஐடியு மாவட்டப் பொருளாளர் சம்பத், உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க பொருளாளர் சரவணன் ஆகியோர் பேசினர்.

புதுக்கோட்டை 

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம பங்சாயத்து இணைப்புக்குழு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆட்சியர் அலுவல கம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழு (சிஐடியு) மாநிலத் தலைவர் ப.சண் முகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, செய லாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஏ.திரவியராஜ உள்ளிட் டோர் பேசினர்.