tamilnadu

img

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும்

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்,  செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் 

திருச்சி மாநகர் முழுவதும் சிபிஎம் கையெழுத்து இயக்கம்

திருச்சி, ஜூலை 14- திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமனம் செய்து 3 ஷிப்டுகளிலும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விரைவான மருத்துவம், அறுவை சிகிச்சை, எக்ஸ் ரே, ஸ்கேன் உள்ளிட்ட சேவைகளை உடனே வழங்க வேண்டும்.  நவீன மருத்துவ பிரிவுகளை உருவாக்க வேண்டும் ; நோயாளிகளுக்கு சுகாதாரமான குடிநீர், சுடுதண்ணீர், தரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.  மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாநகர் முழுவதும் ஞாயிறன்று முதல் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

மேற்கு பகுதிக்குழு

இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிக்குழு சார்பில்  திருச்சி அரசு மருத்துவமனை, ஜல்லிக்கட்டு போராட்ட சாலை, உழவர் சந்தை, தென்னூர், பாண்டமங்கலம், பொன்னகர், மத்தியப் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்  நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது தலைமை வகித்தார். கையெழுத்து இயக்கத்தை மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் கிளைச் செயலாளர்கள் முருகன், அக்பர்அலி, பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆசிக் அலி, அப்துல்கயூம், வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்மலை

பொன்மலை பகுதிக் குழு சார்பில் பொன்மலை சந்தை, பொன்னேரிபுரம், ராஜீவ்காந்தி நகர், சுப்பிரமணியபுரம், ரஞ்சிதபுரம், ஏர்போர்ட், முடுக்குப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் மகேந்திரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், புவனேஸ்வரி, அந்தோணிசேகர், சித்ரா, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காட்டூர்  

காட்டூர் பகுதிக்குழு சார்பில் பழைய பேருந்து நிலையம், பகவதிபுரம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி செயலாளர் மணிமாறன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, லெனின் பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜாஹீர் உசேன், சாதிக், தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாலக்கரை

பாலக்கரை பகுதிக் குழு சார்பில் செந்தண்ணீர்புரம், பாரதி நகர், உக்கடை, கீழப்புதூர், சங்கிலியாண்டபுரம், செங்குளம்காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், மணிமாறன், மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், பகுதிக் குழு உறுப்பினர்கள் கனல்கண்ணன், சிவக்குமார், ரெட்டைமலை, ராகிலா , ரவிக்குமார், பொன்மகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் பேருந்து நிலையம், திருவானைகோவில், பூ சந்தை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, ஜே.ஜே. நகர், ஆண்டவர் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை மூத்த தோழர் நந்தகுமார் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், சந்தானம், பகுதிக்குழு உறுப்பினர்கள் கோவிந்தன், ரகுபதி, செந்தில், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அபிஷேகபுரம்

அபிஷேகபுரம் பகுதிக் குழு சார்பில் பகுதி செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் எடமலைப்பட்டிபுதூர் கடைவீதியில், ராமசந்திரா நகரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா, மாவட்டக்குழு உறுப்பினர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்தநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் பெட்டவாய்த்தலை, புலிவலம் ஆகிய பகுதிகளில் ஒன்றியச் செயலாளர் கருணாநிதி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அஜித்குமார், முருகன், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

மலைக்கோட்டை

மலைக்கோட்டை பகுதி குழு சார்பில் சத்தியமூர்த்தி நகரில் பகுதிக்குழு உறுப்பினர் இளையராஜா, நெடுஞ்செழியன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.