குடவாசல், ஜூன் 14- நெல்லையில் வாலிபர் சங்க பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினருமான தோழர் அசோக்கை படுகொலையை கண்டித்து குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை தலைமையேற்று கண்டன உரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.ராமதாஸ், டி.ஜி.சேகர், ஆர்.இன்பநாதன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பி.குமரேசன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கே.ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.