மணிகண்டம் ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் யமுனாதேவி பாப்பா உமாநாத் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளர்கள் கருப்பையா, பழனியாண்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
***********
மார்க்சிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றிய அலுவலகத்தில் அனைத்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட ஒன்றிய செயலாளர் பாக்கியம் தலைமையில் பாப்பா உமாநாத் நினைவு தினத்தினை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, மாவட்டப் பொருளாளர் ஆர்.சிற்றம்பலம் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. மகாராஜன், டைபி மாவட்டச் செயலாளர் தூரைஅருணன் மற்றும் மாதர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.