தஞ்சாவூர், மே 14-தஞ்சை ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் அதிராம்பட்டினம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் திங்கட்கிழமைஆய்வு செய்து விற்பனைக்காக இருப்பு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை செய்தனர். மேலும், ரூ.13,500 அபராதம் விதிக்கப்பட்டது. உணவகங்களில் தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன் படுத்தி பார்சல் கட்டுவதும், தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதும்குற்றத்திற்குரிய செயல் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது.