tamilnadu

img

சம்பளம் வழங்கிடக் கோரி துப்புரவு தொழிலாளர் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.17- திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த மாதம் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். மாதந்தோறும் 1ம் தேதியே சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   பின்னர் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர் திருஞானம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், டோம்னிக், பாலா, வளர்மதி, லிகாய் தென் மண்டலக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, வாலிபர் சங்க மாவட்ட துணைத்தலைவர் விஜயேந்திரன், பிச்சையம்மா, விஜயன் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையில், கடந்த மாத சம்பளத்தை வரும் திங்கள் கிழமை வழங்குவது. அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு துப்புரவு தொழிலா ளர்களை பயன்படுத்த கூடாது என அறிவிப்பது உள்ளிட்டவை முடிவா னது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.