இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) புதுக்கோட்டை மாவட்ட 11-ஆவது மாநாடு புதுக்கோட்டையில் வருகின்ற ஜூலை 28 அன்று புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான வரவேற்புக்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் தலைமைவகித்தார். மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னாவரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் சிறப்புரையாற்றினார். வுரவேற்புக்குழுத் தலைவராக கவிஞர் நா.முத்துநிலவன், ச.செயலாளராக ஏ.ஸ்ரீதர், பொருளாளராக சி.அடைக்கலசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.