tamilnadu

img

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு  

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்க தேர்வு கட்டணமானது 75 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள், பழைய தேர்வு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  

இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வை தற்காலிகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வம் அறிவித்துள்ளார்.