கும்பகோணம் மே 31-கும்பகோணத்தில் அனைத்து வணிகர் சங்க அமைப்புகளின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார் சோழமண்டல கணினி விற்பனையாளர் சங்க தலைவர் ராமநாதன் ஜவுளி வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார். கூட்டத்தில் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் கலந்து கொண்டார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் தமிழழகன் திமுக செயற்குழு உறுப்பினர் ராஜாராமன் ரயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட ஆலோசகர் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் பொருளாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார். முன்னதாக எம்.பி., ராமலிங்கத்திடம், அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் கும்பகோணம் இடம் பெற வேண்டும். விழுப்புரம் முதல் தஞ்சை வரை மெயின் லைன் ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை அளிக்கப்பட்டது.