tamilnadu

img

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 9-  நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.கருணா, செயலாளர் துரை.நாராயணன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச் செல்வி மற்றும் சங்க நிர்வாகிகள் பசுபதி, ரித்திஸ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.