tamilnadu

img

திருச்சி அருகே கோவில் விழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திருச்சிராப்பள்ளி, ஏப்.21-திருச்சி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறும். விழாவின் போது பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கப்படும். அதாவது சாமிக்கு காணிக்கையாக படைக்கப்படும் அந்த காசுகளை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இந்நிலையில் இந்தாண்டு கோவில் விழா கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறு காலை நடைபெற்றது. இதையொட்டி சனிக்கிழமை இரவு முதல் கோவிலுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் பக்தர்கள் சிரமமின்றி பிடிகாசு வாங்கி செல்லும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. இதைதொடர்ந்து ஞாயிறு காலை சிறப்பு வழிபாட்டுக்கு பின்காணிக்கை காசுகளை பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பக்தர்கள் வரிசையாக சென்று பிடிகாசுகளை பெற்று வந்த நிலை யில் திடீரென அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இதனால் ஒரு வருக்கொருவர் முண்டியடித்து கொண்டு பிடிகாசுகளை வாங்கமுயன்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் பக்தர்கள் சிலர் கீழே விழுந்தனர். இதில் இடிபாடுகளுக் குள் பக்தர்கள் ஏராளமானோர் சிக்கினர். அவர்களில் 7 பேர் பலத்த காயமடைந்தும், மூச்சுத் திணறல் ஏற்பட்டும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.இதையடுத்து அங்கு பாது காப்புக்கு இருந்த காவலர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தி மேலும்காயமடைந்த பக்தர்கள் 10 பேரைமீட்டு துறையூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். விபத்து நடத்தஇடத்திற்கு மத்திய மண்டல ஐ.ஐி.வரதராஜூலு, மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் பக்தர் களுக்கு ஆறுதல் கூறி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

;