மாநில அளவிலான யோகாசனப் போட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை
சின்னாளபட்டி, டிச.15- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர் இப்பள்ளி மாணவர்கள் ரோஹித், ஹர்ஷவர்த்தன் ஆகியோர் பொதுப் பிரிவில் முதல் இடம் பெற்றனர். சங்கீத்பிரியன், கதிர்வேல் ஆனந்தன், கெளதமன் ஆகிய மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். சாதனை மாணவர்களில் ரோஹித் ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
பன்னாட்டு ஆங்கில கருத்தரங்கில் ஏவிசி கல்லூரி மாணவியின் ஆய்வுக் கட்டுரை தேர்வு
மயிலாடுதுறை, டிச.15- சிவகங்கையில் உள்ள தனியார் கல்லூரி யில் நடந்த பன்னாட்டு ஆங்கில கருத்த ரங்கில் கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 52க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்து 500 மாணவ- மாணவிகள்கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் ஏவிசி கல்லூரி ஆங்கிலத்துறை யை சேர்ந்த முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி அ.சத்தியவதி ஆங்கில மொழி கற்றலை மேம்படுத்துவதில் நவீன தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு மற்றும் பயன்கள் என்ற தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த 52 ஆய்வுக் கட்டு ரைகளை தேர்வு செய்து புத்தகமாக கருத்த ரங்கு ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் 45 கட்டுரைகள் பல்கலை., மற்றும் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரி யர்கள், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாண வர்களுடையவை 7 கட்டுரைகள் மாணவர்க ளுடையவை. அதில் மாணவி அ.சத்திய வதியின் ஆய்வுக்கட்டுரையும் உண்டு. மேலும் மாணவி சத்தியவதி இரண்டாவது முறையாக பன்னாட்டு ஆங்கில கருத்த ரங்கில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பன்னாட்டு ஆங்கில கருத்தரங்கில் சிறந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த மாணவி யை கல்லூரியின் தலைவர் என்.விஜய ரெங்கன், செயலர் கி.கார்த்திகேயன், பொரு ளாளர் என்.ஞானசுந்தர், கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், முதல்வர் இரா.நாகராஜன், பேராசிரியர்கள், பணி யாளர்கள் மற்றும் சக மாணவ- மாணவி கள், பெற்றோர் பாராட்டினர்.