திண்டுக்கல், அக்.10 வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தொப்பம்பட்டி மக்காச்சோள விவசாயிகள் பாடை கட்டி போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்ட த்தில் ஒட்டன்சத்தி ரம், தொப்பம்பட்டி, பழனி, ரெட்டியார்சத்தி ரம் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் திரும்பிய திசை யெங்கும் மக்காச்சோளம் தான். ஆனால் இந்த மக்காச்சோளத்தில் நல்ல லாபம் கண்டது ஒரு காலம். பெரும்பாலான விவசாயி கள் மக்காச்சோளம் பயிரிடுவதால் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாகரை யில் மக்காச்சோளம் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுப் பயிருக்கு செல்ல மனமில்லாத விவசாயிகள் மீது அடுத்தடுத்து அடி விழுந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு தொப்பம்பட்டி பகுதியில் மக்காச் சோளம் பயிரிட்ட விவசாயிகள் வறட்சியின் காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகினர். வறட்சியால் பாதிப்புக்குள்ளான தொப்பம்பட்டி மக்காச்சோள விவசாயிகள் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் மோடி அரசின் விளம்பரத்தை நம்பி ஏமாந்தனர். இந்த திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ஒற்றை இலக்கத்தில் ரூ.1 முதல் ரூ.9 வரை நஷ்ட ஈடு வழங்கி விவசாயிகள் தலையில் இடியை இறக்கியது மத்திய அரசு. இதற்காக இன்றுவரை அந்த பகுதி விவசாயிகள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு விவசாயிகள் குறை தீர் கூட்டத்திலும் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் அதிகாரிகளிடம் இருந்து பதில் குரல் வருவதில்லை. இதனையடுத்து மீண்டும் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் அமெரிக்கப்படை புழு தாக்குதல் தொடங்கியது. இதனால் அடுத்த பருவத்தி லும் இப்பகுதி விவசாயிகள் அல்லாது பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் பகுதி விவசாயிகளும் கடும் பாதிப்புக்குள்ளா கினர். மூன்றாவதாக கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரண மாக தமிழக அரசு ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 4 கிலோ மக்காச்சோளத்தை இலவசமாக பயிரிட வழங்கியது. மாவட்டம் முழுவதும் 26 டன் மக்காச்சோளம் இதே போல் வழங்கியது. தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி. போடுவார்பட்டி, கொங்கபட்டி, வல்லகுண்டாபுரம், பொருளுர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அரசு கொடுத்த மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டனர். தண்ணீர் பாய்ச்சி பயிர் முளைக்கும் என்று ஏங்கிய விவசாயிகளுக்கு அதிர்ச்சி தான் மிஞ்சியது. 20 நாட்களாகியும் அரசு கொடுத்த மக்காச்சோளம் முளைக்க வில்லை. முளைத்த பயிரும் கருகியது. கஜாபுயலில் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு கொடுத்த மக்காச்சோளம் முளைக்காததால் மேலும் இப்பகுதி விவசாயிகள் விரக்தியடைந்தனர். இதே போல மாவட்டம் முழுவதும் மக்காச்சோளம் முளைக்கவில்லை. இந்த மக்காச்சோளம் குறித்து வாகரை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வ செய்து வருகிறார்கள். ஆனால் பாதிப்பு விவசாயிகளுக்குத் தானே. அதிகாரிகள் இது குறித்து எதுவும் சொல்ல முடியாமல் உள்ளது. எனவே தொடர்ந்து மக்காச்சோளத்தை நம்பி பயிரிட்ட விவசாயி கள் பலர் கடன் வலையில் சிக்கியும், தவித்து வருகிறார்கள். நல்ல விதையை கொடுக்காமல் முளைக்காத விதையை கொடுத்த தமிழக அரசைக் கண்டித்து கீரனூரில் வேளாண் அலுவலகம் முன்பாக புதனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக பாடைகட்டி போராட்டம் நடைபெற்றது. போராட்ட த்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கனகு தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் பி.செல்வராஜ் சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராமசாமி ஆதரித்துப் பேசி னார். ஒன்றியத்தலைவர் சின்னத்துரை, பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றியத்துணை த்தலைவர் பொன்ராஜ், நல்லப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (நநி)