tamilnadu

img

மேலக்கொருக்கையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

 திருத்துறைப்பூண்டி, ஜூலை 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியக்குழு நகரக்குழு சார்பில் கொருக்கை ஊராட்சி ஒன்றியம் மேலக்கொருக்கையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.வேதையன், வி.ரவி, எஸ்.பவானி, கிளை செயலாளர் உலகநாதன் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் சமாதான கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்புதல் அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

;