tamilnadu

தருமபுரி முக்கிய செய்திகள்

தருமபுரி அருகே கார் விபத்து: தந்தை,மகன் பலி

தருமபுரி, ஆக.8- தருமபுரி அருகே வியாழனன்று ஏற் பட்ட சாலை விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  திருப்பூரை சேர்ந்த மூர்த்தி மகன் சுப்பு ராஜ் (30). இவர் ரெடிமேடு ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கீர்த்திகா (27). இவர் களது இரண்டரை வயது குழந்தை விமன், சுப்புராஜின் நண்பர் மகேந்திரன் (29). இவரது மனைவி அனிதா. இவர்களது மகன்  கிருஷ்வின். இவர்கள் அனைவரும் திருப் பூரில் இருந்து கார் மூலம் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிக்க புறப்பட்டு வந்தனர். காரை கீர்த்திகா ஓட்டினார்.  தருமபுரியை அடுத்த சேஷம்பட்டி பிரிவு  சாலை அருகே வந்தபோது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி  கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுப்புராஜும், அவரது மகன் விமனும் சம்பவ இடத்திலே  பலியானார்கள். மற்ற 4 பேர் காயங் களுடன் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இந்த விபத்து குறித்து அதிய மான் கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரூரில் மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு போட்டி

தருமபுரி, ஆக.8-  தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில் விளை யாட்டு போட்டிகளில் நடைபெற்று வரு கிறது. அதன் ஒருபகுதியாக அரூரில் லயோலா கல்வி நிறுவனமான புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில்  சதுரங்க விளையாட்டு போட்டி நடை பெற்றது. இந்த சதுரங்க போட்டியை அரூர்  சட்டமன்ற உறுப்பினர் சமபத்குமார் துவக்கி  வைத்தார். இப்போட்டியில் 52 அரசு மற்றும் தனி யார் பள்ளிகளைச் சேர்ந்த 110 மாணவிகள், 160 மாணவர்கள் என மொத்தம் 270 பேர் கலந்து கொண்டனர்.  இதில் சிறப்பு அழைப் பாளர்களாக அருள் பணி அருள்,  இக்னேசியல் பிரிட்டோ, பால் பெனட்டிக், உதவி தலைமையாசிரியர் செல்வராஜ் உள்பட உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.