tamilnadu

அரசு பள்ளி மாணவர்களையும் நூலக உறுப்பினர்களாக்கி கிராம மக்கள் மகிழ்ச்சி

தருமபுரி, ஜன. 30- குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடிய அரசு பள்ளி மாணவர்களை நூலக உறுப்பினர்களாக்கி வாதாப்பட்டி கிராம மக்கள் கௌரவித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் வாதாப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 33 மாணவர்கள் படித்து வருகின்றனர். குடியரசு தின விழாவின் ஒருபகுதியாக முதலில் உறுதி மொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள், இந்தியாவின் பன்மைத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை குறித்து கலை நிகழ்ச்சிகளை சிறப்பாகக் கொண்டாடினர்.  இந்நிலையில் குடியரசு தினவிழாவை கலைவிழாவு டன் கொண்டாடியதற்காக பள்ளியில் பயிலும் 33 மாண வர்களுடன், அவர்களை ஊக்குவித்த தலைமையாசிரியர்  மங்கை, உதவி ஆசிரியர் நிவாஸ் ஆகிய இரண்டு ஆசிரியர் களையும் சேர்த்து 35 பேருக்கும் சிறப்புப் பரிசாக வாதாப் பட்டியில் உள்ள பகுதிநேர நுலகத்தில் உறுப்பினர்க ளாக்கி கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நூலக உறுப்பினராவதற்கான  தொகையை தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரயர் கு.சிவப்பிரகா சம் வழங்கினார். இவ்விழாவில் வாதாப்பட்டி பள்ளியில்  படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்க ளும், இளைஞர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

;