tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம், மார்ச் 5- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து  இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில்   வியாழனன்று பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  குடியுரிமை திருத்த சட்டம்  மற்றும் என்ஆர்சி, என்சிஆர்  ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த இரு மாத  காலமாக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் இஸ்லா மிய அமைப்பினர் தொடர்ந்து  பல்வேறு  போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வியாழனன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்பு மற்றும்  அஹலே சுன்னத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மத்திய பாஜக அரசு இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கவும், மக்களை மொழி, இனம், சாதி வாரி யாக பிளவுப்படுத்தும் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள குடி யுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். குடியுரிமை சட்டத் தினை அமல்படுத்த மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  முன்னதாக, ஒகேனக்கல் சாலை யில் உள்ள முள்ளுவாடி பகுதியி லிருந்து பேரணி துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று  பேருந்து நிலையத்தில் முடிவ டைந்தது. பேரணியில் இஸ்லாமிய பெண்கள், சிறுவர்கள் என  1500-க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். இந்த ஆர்ப்பாட் டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார், சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.குணசேகரன், ஐ. ஞானசௌந்தரி ஆகியோர் உரை யாற்றினர். மேலும், சிபிஎம் தருமபுரி  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிசுபாலன், விஸ்வநாதன், வி.மாதன், எம்.முத்து, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.எம்.முருகேசன், ரவி, சிவா, பென்னாகரம் பகுதி குழு  செயலாளர் கே.அன்பு, சின்னம் பள்ளி பகுதி குழு செயலாளர் சக்தி வேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செய லாளர் பாலசந்திரபோஸ், மாவட்டச்  செயலாளர் எழிலரசு, மாவட்ட தலைவர் சிவன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். 

;