தருமபுரி,டிச.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தோழர் சி.கே.குழந்தை வேல் காலமானார். தருமபுரி மாவட்டம், பாரதி புரத்தைச் சேர்ந்தவர் சி.கே.குழந் தைவேல் (85). இவர் 1963ம் ஆண்டு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக் கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்டார். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி நகரக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார் தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கோரிக்கைகளுக்கான போராட் டத்தில் தன்னை இணைத்து கொண்டு பலமுறை சிறை சென்ற வர். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் திங்களன்று மாலை காலமானார். இவரது மறைவை அறிந்து அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு மாவட்டச் செயலாளர் ஏ.குமார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸாமேரி, டி.எஸ்.ராமச் சந்திரன், நகரசெயலாளர் ஆர். ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி நகரக்குழு உறுப்பி னர்கள் எஸ்.மணிகண்டன், வி.மார்க்ஸ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.