தருமபுரி, ஜூன் 29- தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் அக்ரிநகர் சமுதாயகூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சிசெயலாளர் சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கடந்த ஓர் ஆண்டு கால மாக ஊராட்சியில் நடைபெற்ற பணிகள், அதற்கான நீதிஒதுக்கீடு குறித்து அறிக்கை முன்வைத்தார். அப்போது சபையில் கூடியிருந்த மக்கள் குடிநீர், சாலை மேம்பாடு, கட்டிடம் என நடைபெற்ற வேலைகள் எந்த எந்த தெருக்களில், பகுதிகளில் நடைபெற்றது என கூறவேண்டும். இனம்வாரியாக செலவுகணக்குகளை தரவேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் தராமல் கூட்டம் நடத்தவே சலசலப்பு ஏற்பட்டது. மேலும், இந்த ஊராட்சியில் 40,ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராமசபை கூட் டத்துக்கு ஆயிரம் நோட்டீஸ் அடித்துவிட்டு அதை டீக் கடையில் வைத்துவிட்டு சென்று விட்டதாகவும், கூட்டத் தகவல் மக்களுக்கு முறையாக செல்லவில்லை என கூட்டத்தை நடத்த வந்த அதிகாரிகளிடம் புகார் தெரி வித்தனர். வெண்ணாம்பட்டி ஏரி, பிடமனேரி ஏரி, குள்ளனூர் ஏரி, வி.ஜெட்டிஅள்ளி ஏரி ஆகிய ஏரிகளுக்கு வரும் நீர் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி கால்வாய்களைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர். மனுவாகவும் ஊராட்சி செயலாளரிடம் அளித்தனர்.